#JustNow: ஆசிய சாம்பியன்ஷிப் – பி.வி.சிந்துக்கு வெண்கலம்.. அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி!

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துக்கு வெண்கலம் பதக்கம்.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று நடைபெற்ற காலியிறுதி போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்று விளையாடிய இந்திய வீராங்கனை பி.வி சிந்து, சீன வீராங்கனை ஹீ பிங்ஜியாவோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதை உறுதி செய்திருந்தார். சீன வீராங்கனையை 21-9, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார்.

இந்த நிலையில், மிகவும் எதிர்பார்ப்பில்இன்று நடைபெற்ற ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷி தொடரின் அரையிறுதி போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, ஜப்பான் வீராங்கனை அகேன் யமகுச்சியிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துக்கு வெண்கலம் பதக்கம் கிடைத்தது. அரையிறுதி போட்டியில் ஜப்பானின் அகேன் யமகுச்சியிடம் 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்