உங்களது வேலையை மட்டும் பாருங்க.! வனிதா மறுமணம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ட்வீட்.! பதிலடி கொடுத்த வனிதா.!

வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து தனது கருத்தை வெளியிட்ட லட்சமி

By ragi | Published: Jun 29, 2020 05:58 PM

வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து தனது கருத்தை வெளியிட்ட லட்சமி ராமகிருஷ்ணன் அவர்களிடம் உங்கள் வேலைகளை பாருங்கள் என்று வனிதா கூறியுள்ளார்.

இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த சனிக்கிழமையன்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பீட்டர் பவுலின் முதல் மனைவி சென்னை வடபழனி காவல் நிலையத்தில் தன்னை விவாகரத்து செய்யாமலையே தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக கூறி புகார் செய்தார். இது குறித்து நடிகை மற்றும் இயக்குநரான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,

நான் இந்த செய்தியை இப்போது தான் பார்த்தேன். அந்த மனிதன் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து செய்யவில்லை. அப்படி இருக்கையில் கல்வியும், வெளிப்பாடும் உள்ள ஒருவர் எப்படி இத்தகைய தவறு செய்ய முடியும் என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். திருமணம் முடியும் வரை ஏன் அவர் முதல் மனைவி அமைதியாக இருந்தார், திருமணத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாமே. பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து வந்த வனிதா அவர்களுக்கு இந்த உறவு நன்றாக அமையும் என்று நினைத்தேன் அனைவரும் அவள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள் ஆனால் அவர் இந்த பக்கத்தை கவனிக்கவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த வனிதா, உங்களுக்கு தெரியாத ஒன்றில் அக்கறை கொள்வது உங்களது வேலை அல்ல. நீங்கள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். உங்களுக்கு தெரியாத ஒருவரை குறித்து எந்த வித கருத்துக்களையும் கூற வேண்டாம் . இது நீங்கள் நடத்தும் தொலைக்காட்சி ஷோ அல்ல. இதை சரிப்படுத்துவது எப்படி என்று எங்களுக்கு தெரியும், உங்களது வேலையை பாருங்கள் என்று கூறியுள்ளார். அதனையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவின் திருமணத்தை குறித்து பேசுவதை நிறுத்தி கொள்கிறேன். சட்டப்பூர்வ விவாகரத்து இல்லாமல் மறுமணம் செய்வதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இருந்தால்எனது கருத்தை ட்வீட் செய்தேன். இதை விட முக்கியமான விஷயங்களான துஷ்பிரயோகம், கற்பழிப்பு, தந்தை மகன் மரணம் ஆகியவற்றிற்கு எதிராக குரல் கொடுப்போம் என்று கூறியுள்ளார். தற்போது இவர்கள் இருவரது ட்வீட்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Step2: Place in ads Display sections

unicc