Junior World cup Hockey: அரையிறுதி போட்டியில் ஜெர்மனியிடம் இந்தியா வீழ்ந்தது..!

Junior World cup Hockey: அரையிறுதி போட்டியில் ஜெர்மனியிடம் இந்தியா வீழ்ந்தது..!

அரையிறுதி போட்டியில் ஜெர்மனியிடம் நடப்பு சாம்பியனான இந்தியா தோல்வியடைந்தது.

12-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்)  புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற  அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை சந்தித்தது. கால்இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.

இந்நிலையில், அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா அரையிறுதியில் ஆறு முறை பட்டம் வென்ற ஜெர்மனிக்கு எதிராக 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடைசி நிமிடத்தில் பாபி ஒரு கோலை அடித்தார். ஆனால், அது ஆறுதல் கோலாகவே அமைந்தது.

முதல் கால்பகுதி முடிந்தபோது 1-0 என ஜெர்மனி முன்னிலையில் இருந்தது. ஜெர்மனிக்கு இரண்டு பெனால்டி வாய்ப்பு கிடைத்ததில் ஒன்றை கோலாக மாற்றினார். ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் ஜெர்மனி ஆறு முறை சாம்பியனாகவும், இந்தியா நடப்பு சாம்பியனாகவும் உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube