30 C
Chennai
Friday, October 22, 2021

#Breaking:ஏழு உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் இடமாற்றம்…!

இந்தியாவில் உள்ள ஏழு உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஏழு உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும்,இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் ராஜ்நாத் சிங், இந்திய மாண்புமிகு தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து,பின்வரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை மாற்றியுள்ளார்.அதன்படி,

  1. நீதிபதி ராஜன் குப்தா – பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றத்திலிருந்து,  பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம்.
  2. நீதிபதி டி.எஸ். சிவஞானம் – சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து, கல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம்.
  3. நீதிபதி சுரேஷ்வர் தாக்கூர் – இமாச்சல பிரதேசம் உயர்நீதிமன்றத்திலிருந்து,பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம்.
  4. நீதிபதி பி.பி. பஜந்திரி – கர்நாடகா உயர்நீதிமன்றத்திலிருந்து பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம்.
  5. நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா – ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திலிருந்து  பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம்.
  6. நீதிபதி டி. அமர்நாத் கவுட் – தெலுங்கானா உயர்நீதிமன்றத்திலிருந்து திரிபுரா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம்.
  7. நீதிபதி சுபாஷ் சந்த் – அலகாபாத் உயர்நீதிமன்றத்திலிருந்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்கள்.

 

spot_imgspot_img

Hot Topics

Read More