,

தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு எம்.பி பாரிவேந்தருக்கு ஜே.பி.நட்டா அழைப்பு..!

By

pariventhar

என்டிஏ ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பெரம்பலூர் எம்.பி.பரிவேந்தருக்கு ஜே.பி.நட்டா அழைப்பு. 

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை பாஜக தலைமையில் என்டிஏ ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நாளை நடைபெற உள்ள பாஜக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், என்டிஏ ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பெரம்பலூர் எம்.பி.பரிவேந்தருக்கு ஜே.பி.நட்டா கடிதம் மூலமாக அழைப்பு விடுத்துள்ளார்.