உரிமைக்காக தட்டி கேட்ட இளைஞரை வேலையில் இருந்து நீக்கிய ஜொமாட்டோ நிறுவனம்

தற்போது இந்த காலகட்டத்தில் மக்கள்கள் ஹோட்டல் உணவை வீட்டுக்கு வர வழைத்து சாப்பிடும் நிலை உருவாகியுள்ளது. அதில் சிறந்து விளங்கும் ஸ்விக்கி, ஜொமாட்டோ,  ஊபர் ஈட்ஸ் நிறுவனங்கள் டெலிவரி செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

அதிலும் அதிகமாக படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் பொறியியல் போன்ற உயர் படிப்புகளை முடித்த பல இளைஞர்கள் இந்த டெலிவரி பாய் வேலையை செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,அந்த படித்த இளைஞர்களை இழிவானவர்களாகவும் தீண்டத்தகாத வர்களாகவும் பார்க்கும் நிலை அதிகரித்து வருகிறது.

சமீபத்தில்  புதுச்சேரியில் டெலிவரி பாய் என்ற ஒரே காரணத்துக்காக ஜொமோட்டோ ஊழியரை புரொவிடெண்ட் மாலில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.

அங்கு நடந்ததை  தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் அந்த ஜொமோட்டோ ஊழியர்.

அந்த விடியோவை பார்த்த ஜொமோட்டோ அதிகாரிகள் மற்றும் மால் அதிகாரிகள் டெலிவரி செய்த அசோக் என்ற வாலிபரை சமாதானம் பேச அழைத்து அங்கு வந்த அசோக்கை”உன்னிடம் மன்னிப்பு கேட்க முடியாது என மால் அதிகாரிகள் கூறினார் மேலும்  ஜொமோட்டோ நிறுவனம் அவரை வேலை விட்டு நீக்கியுள்ளது”.

இதை தொடர்ந்து அந்த விடியோவை நீக்க சொல்லி ஜொமோட்டோ நிறுவன அதிகாரிகள் கூறினார்.அதற்க்கு அசோக் நீக்க முடியாது இப்போது நான் உங்களிடம் வேலை செய்யும் ஊழியர் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் ஜொமோட்டோ நிறுவனம் உன் மீது வழக்கு தொடுவதாக கூறினார்.அதற்கு அசோக் நீங்க வழக்கு போடுங்க நான் பார்த்து கொள்கிறேன் என கூறி விட்டு போனை வைத்து உள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் ஜொமோட்டோ நிறுவனங்களில் மட்டும் நடக்கவில்லை பல நிறுவங்களின் நடந்து வருகிறது.பல இளைஞர்கள் தங்களின் வறுமையின் காரணமாக இது போன்ற சம்பவங்களை வெளியில் சொல்லாமல் வேலை செய்து வருகிறார்கள் என இளைஞர் அசோக் கூறியுள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.facebook.com/TamilFunUnlimited/videos/2288014801521290/

author avatar
murugan

Leave a Comment