ஜான்சன் & ஜான்சன் டால்கம் பேபி பவுடர் விற்பனை நிறுத்தம்.! ஏன் தெரியுமா.?

அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் டால்கம் பேபி பவுடருக்கான விற்பனையை நிறுத்தி வைப்பதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறத

உலக முழுவதும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. அந்தவகையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உற்பத்தி செய்யும் டால்கம் பேபி பவுடர் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையுடையது என அமெரிக்காவில் மட்டும் சுமார் 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வழக்குத் தொடர்ந்து உள்ளனர். இதையடுத்து, இந்நிறுவனத்தின் மீது போடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடப்படுகிறது. 

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணத் தொகையாக வழங்கவேண்டும் என தீர்ப்பளித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து, தற்போது  அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் டால்கம் பேபி பவுடருக்கான விற்பனையை நிறுத்தி வைப்பதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. டால்கம் பவுடர் என்பது மக்னீசியம் மற்றும் சிலிக்கான் சேர்க்கப்பட்ட ஒரு மென்மையான கனிமம் ஆகும். இந்த நிலையில், குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த டால்கம் பவுடரில் செயற்கையான கனிமங்கள் சேர்க்கப்படுவதால் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது இரு நாட்டில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்