,

சச்சின், கோலியை முந்திய ஜோ ரூட்… கிரிக்கெட்டில் இப்படியொரு சாதனையா.!

By

Joe root Record Sachin

இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் முதல் முறையாக தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்துள்ளார்.

ஆஷஸ்:

நடந்து வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட், இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்த நிலையில் முதன்முறையாக ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து  வெளியேறினார். நேதன் லியொன் பந்தில் ரூட், ஸ்டம்பிங் அவுட் ஆனார். இதன் மூலம் ஜோ ரூட் ஒரு வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார்.

முதன்முறை அவுட்:

அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த பிறகு முதல்முறையாக ஸ்டம்பிங் முறையில் ஆட்டமுழந்தவர் என்ற பட்டியலில் ஜோ ரூட் தற்போது, இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், மற்றும் விராட் கோலிக்கு முன்னே சென்றுள்ளார்.

சச்சின், கோலிக்கு முன்னே:

அதாவது ஜோ ரூட் தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11,168 ரன்கள் வரை அடித்த நிலையில் முதன்முறையாக ஸ்டம்பிங் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 7419 ரன்களும்,  விராட் கோலி 8195 ரன்களும் எடுத்த பிறகு முதன்முறையாக இவ்வாறு ஆட்டம் இழந்து வெளியேறியுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் சந்தர்பால், இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 11,414 ரன்களுக்கு பிறகு இவ்வாறு ஆட்டமிழந்துள்ளார். இரண்டாவதாக தற்போது ஜோ ரூட் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

யார் வெற்றி பெறுவார்கள்?

ஜோ ரூட் குறிப்பாக ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்காக 118* ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இறுதி நாளில் ஆஸ்திரேலிய அணிக்கு கைவசம் ஏழு விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில்,  வெற்றி பெற 174 ரன்கள் தேவைப்படுகிறது.