வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியை நியமித்த ஜோ பைடன்!

வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக ரோன் க்ளையினை ஜோ பைடன் நியமித்துள்ளார். 

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதனைதொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர்களின் கூட்டணி, அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி பதவியேற்க உள்ளனர். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும், அது தொடர்பான கொரோனாவை கட்டுப்படுத்தும் முன்னணி அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் பட்டியலை வெளியிடவுள்ளதாக தேர்தலில் வெற்றிபெற்ற நாளன்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது, மக்கள் பலரிடையே வரவேற்பபை பெற்றுள்ளது.

இந்தநிலையில், ஜோ பைடனின் நீண்ட நாள் உதவியாளராக இருந்த ரோன் க்ளையினை வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார். இந்த பணியில் அதிபரின் செயல் அலுவகத்தில் மேற்பார்வை பொறுப்பை கவனிப்பதுடன், அதிபரின் செனட் அலுவலராகவும் செயல்படுவார்.