2020-ஆம் ஆண்டின் சிறந்த நபர்கள் ஜோ பைடன்,கமலா ஹாரிஸ் -டைம் இதழ் தேர்வு.!

2020-ம் ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க அதிபராக பதிவியேற்க உள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை டைம் இதழ் தேர்வு செய்துள்ளது.

பிரபல பத்திரிக்கை நிறுவனமான டைம் ஒவ்வொரு வருடமும் திறமையாக செயல்பட்டு செய்திகளில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கப்படுவது வழக்கம் .இது கடந்த 1927-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2020-ம் ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக விரைவில் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அவர்களை தேர்வு செய்துள்ளனர்.சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் ஆகியோர் கொரோனா சூழலில் களத்தில் இறங்கி துரிதமாக செயல்பட்ட முன்கள பணியாளர்கள்,இன நீதி இயக்கத்தை சேர்ந்த அந்தோணி ஃபயூசி மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரை பின்னுக்கு தள்ளி 2020-ம் ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்வாகியுள்ளனர் .

இந்தாண்டு சிறந்த நபராக துணை அதிபரும் தேர்வாகியது இதுவே முதல் முறையாகும் .இந்த நிலையில் டைம் இதழ் வெளியிட்ட அட்டைப்படத்தில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் புகைப்படத்துடன் “அமெரிக்காவின் கதை மாறுகிறது” என்ற சொற்களுடன் அச்சிடப்பட்டுள்ளது.கடந்தாண்டு சிறந்த நபராக சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் என்பவர் தேர்வாகி பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

joe biden and kamala harris