பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் கேட்ட ஜோ பைடன்..! வெளியான தகவல்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்டோகிராப் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் ஹிரோஷிமாவில் நேற்று நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் பிரதமர் மோடி பேசும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தங்களுக்கு டிக்கெட்கள் வேண்டுமென்று முக்கிய நபர்களின் கோரிக்கைகள் வந்தவண்ணம் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து அடுத்தமாதம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க தலைவர்கள் அரசு விருந்து அளிக்க உள்ளனர். இது குறித்து பேசிய அதிபர் பைடன், பிரதமர் மோடி பேசும் விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதும் உள்ள அனைவரும் விரும்புகிறார்கள். எனக்கு டிக்கெட் தீர்ந்து விட்டது என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது பெரிய கூட்டத்தை எப்படி எளிதாக வழி நடத்தினார் என்பதை நினைவு படுத்தினார். இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியிடம், உங்கள் ஆட்டோகிராப் வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.