வெற்றிக்கான மேஜிக் நம்பரை நோக்கி முன்னேறுகிறார் ஜோ பைடன்.!

270 சபை ஓட்டுகளை பெற்றால் வெற்றி என்ற மேஜிக் நம்பரை நோக்கி முன்னேறுகிறார் ஜோ பைடன்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 227 பிரதிநிதிகளுடன் முன்னேற்றம் கண்டு வருகிறார். டிரம்ப் 204 பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெற்றால் வெற்றி என்ற மேஜிக் நம்பரை நோக்கி முன்னேறுகிறார் ஜோ பைடன்.

இதனிடையே, மினசோட்டா மாகாணத்தில் ஜோ பைடன் வென்றுள்ளார். மினசோட்டாவில் 10 எலக்டோரல் ஓட்டுக்கள் கிடைக்கும். 1976 முதல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வருகிறது மினசோட்டா. இதுவரை ஜோ பைடனுக்கு 49.77% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.

அதேபோல், மிசிசிப்பி மாகாணத்தில் 11 எலக்டோரல் வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்புக்கு இதுவரை 48.65 % வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. ஆதலால், கூடிய விரைவில் மீதமுள்ள வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்