வீட்டில் இருந்தே வேலை அறிவிப்பு! இன்டர்நெட்-டுக்கு தட்டுப்பாடு!

கொரோனா பாதிப்பால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக வீட்டில் இருந்த ஊழியர்கள் பணிபுரியும் திட்டத்தை பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்த துவங்கி உள்ளன. இதனால் இணைய பயன்பாடு அதிகமாகி வருகிறது.

இது குறித்து மொபைல் சேவை நிறுவனங்கள் சங்கத்தின் இயக்குனர்  ஜெனரல் ராஜன் மேத்யூஸ் கூறுகையில், ‘இந்த சங்கத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைய பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்களை அனுப்பியுள்ளன. இதன்படி இணைய பயன்பாடு சராசரியாக 10 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் பயன்பாடு அதிகரித்ததால் இணைய சேவையில் பாதிப்பு ஏற்படாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத அளவுக்கு நெட்வொர்க் அமைத்து செயல்படுத்தி வருகின்றன. தற்போது இந்த நெட்வொர்க்கில் முதல் 65 முதல் 70 சதவீதம் தான் பயன்பாட்டில் உள்ளது. எனவே பயன்பாடு மேலும் அதிகரித்தாலும் எளிதாக சமாளித்துவிடலாம்.’ என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.