50 எம்.எல்.ஏக்களின் ஆதரவு! 29ஆம் தேதி முதல்வர் பதவியேற்பு! களைகட்டும் ஜார்கண்ட் சட்டசபை!

  • ஜார்கண்ட் மாநில தேர்தல் நிறைவு பெற்று காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்றது. 
  • இதில் ஜே.எம்.எம் கட்சி சார்பாக ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். 

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதில் ஆளும் பாஜக தனித்து போட்டியிட்டு 25 தொகுதிகளை கைப்பற்றது. காங்கிரஸ் கட்சி ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியுடன் கூட்டணி வைத்து 47 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

இதில், காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணியில் ஜே.எம்.எம் கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இது குறித்து ஜார்கண்ட் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். டிசம்பர் 29இல் முதல்வராக ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

ஆளுனரை சந்தித்து விட்டு திரும்பி வருகையில், ஹேமந்த் சோரன், ‘ தங்களுக்கு 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.