உலகநாயகனுக்கு மகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்.?

உலகநாயகனுக்கு மகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்.?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் அவருக்கு மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் பஹத்பாசில் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் 10- ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது.விக்ரம் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 16- ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில், விக்ரம்’ படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகர் ஜெயராம் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை குறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைபடத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube