ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க என்ன தகுதி இருக்கிறது.! கங்கனாவை சாடிய மீரா மிதுன்.!

மீரா மிதுன் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதா

By ragi | Published: Jun 30, 2020 06:30 PM

மீரா மிதுன் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி உள்ளது என்று சாடியுள்ளார்.

மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் . சூப்பர் மாடலான இவர் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒருவராவர். மேலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சைகளுக்கு உள்ளாவதே இவரது வழக்கம். வழக்கமாக ரசிகர்கள் இவரை திட்டியும், ஆபாசமாக பேசியும் வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நடிகை கங்கனா ரணாவத் அவர்களை கடுமையாக திட்டி விளாசியுள்ளார். கங்கனா ரணாவத் தற்போது ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு வாரிசு நடிகர்கள் தான் காரணம் என்று கூறி பல விமர்சனங்களை கூறி வந்தார். இதனை மீரா மிதுன் எதிர்த்து நீங்கள் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க என்ன தகுதி உள்ளது என்று கேட்டுள்ளார்.

மீரா மிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் சுஷாந்த் சிங் விவகாரத்தில் கங்கனா ரணாவத் தேவையில்லாமல் கருத்து தெரிவித்து வருகிறார். நீங்கள் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க என்ன தகுதி இருக்கிறது என்றும், தமிழ் பட உலகில் உள்ள அரசியலால் மட்டுமே உங்களை நடிக்க வைத்து தவறு செய்துள்ளது. இது அவருக்கே வெட்க கேடானது. படித்த புகழ்பெற்ற துணிச்சலுடன் வாழ்ந்த ஜெயலலிதா கதா பாத்திரத்தில் நடிப்பதற்கு நீங்கள் சற்றும் பொருத்தமில்லாதவர் என்று கூறியுள்ளார். அவரது இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc