ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணைக்கு இடைக்கால தடை ! உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு  இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.

Image result for ஆறுமுகசாமி

அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆறுமுகசாமி  ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இன்று இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை  விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு  ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு  இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரிய அப்போலோ நிர்வாகத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.இதன்பின் உச்சநீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு  இடைக்கால தடை விதித்து உள்ளது.

Leave a Comment