ஜெயலலிதா வேதா இல்ல வழக்கு ! இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்தார்.இதனை தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்தது.நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இதனிடையே , வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது .எனவே ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ. 67,90,52,033 டெபாசிட் செய்தது.

இதனையடுத்து நினைவு இல்லமாக மாற்ற அரசு இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு அரசுடைமையானது என்று தமிழக அரசு அறிவித்தது. உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது. நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதலமைச்சர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் நினைவு இல்லத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இதனிடையே தான் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிராக ஜெ.தீபா மற்றும் தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்நிலையில் ஜெ.தீபா ,தீபக் தொடந்த வழக்குகளின் விசாரணை இன்று  நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

Recent Posts

பட்ஜெட் விலையில் 8ஜிபி ரேம்..6000mAh பேட்டரி..கலக்கும் சாம்சங் கேலக்ஸி 5ஜி ஸ்மார்ட் போன்.!

Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…

11 mins ago

‘பவர்ப்ளேல விக்கெட் எடுக்க கத்துக்கணும்’- சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் !

Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…

20 mins ago

கோவை சரளாவுக்கு கட்டு கட்டாக பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்! காரணம் என்ன தெரியுமா?

M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…

38 mins ago

நாம் ஓட்டுப்போட்டு என்னவாகப்போகுது.? மாறும் நகர்ப்புற தேர்தல் மனநிலை.!

Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…

53 mins ago

21 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்! எந்த மாநிலத்தில் அதிக வாக்கு சதவீதம் அதிகம்?

Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…

1 hour ago

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க! விஜய் ஆண்டனி வேதனை!

Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…

2 hours ago