விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் – மசோதா தாக்கல்

ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்க சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அண்மையில் 110 – விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவரது அறிவிப்பில் , திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.இந்நிலையில் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்க சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஆகவே திருவள்ளுவர்  பல்கலைக்கழகத்தை பிரித்து ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்றும் விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி,கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் ஜெயலலிதா பல்கலைக்கழகம் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.