ஜெயலலிதா நினைவிடம்: சிறப்பு அதிகாரியை நியமித்த தமிழக அரசு.!

ஜெயலலிதா நினைவிடம்: சிறப்பு அதிகாரியை நியமித்த தமிழக அரசு.!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க கடந்த 2018ம் தமிழக அரசு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து, அதே ஆண்டு மே மாதத்தில் கட்டுமான பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், நினைவு மண்டபத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் டிஜிட்டல் வீடியோ காட்சி வைக்க ரூ.11.84 கோடியில் பணி நடந்து வருகிறது. இந்த நினைவிடம் ஒரு பறவை போன்ற அமைப்பில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணியை 2 மாதங்களுக்குள் முடித்து, ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி நினைவிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை கண்காணிக்க பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பாண்டியராஜனை சிறப்பு அதிகாரியாக நியமித்தது தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube