” மத்திய அரசை விமர்சித்தது சரியே ” தம்பிதுரை கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜெயக்குமார்…!!

10

நேற்று நடைபெற்ற பாராளுமன்றத்தில் அ.தி.மு.க மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.G.S.T என்று மத்திய அரசு கொண்டுவந்து மாநில அரசுக்களை பிச்சை எடுக்க வைத்து விட்டது என்று விமர்சித்து பேசினார்.இது அதிமுக – பிஜேபி கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தி.மு.க_வின் பொன்முடி தம்பிதுரையின் கருத்து அ.தி.மு.க_வின் கருத்தா அல்ல சொந்த கருத்தா? என்று கேள்வி எழுப்பினார்.இதற்க்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மக்களவையில் தம்பிதுரையின் கருத்து தவறானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.இதனால் பாஜகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.