Jawan: கட்டிபுடிடா…பாலிவுட்டை அலறவிட்ட அனிருத்-அட்லீ.! ஆழ்வார்பேட்டை டூ அந்தேரி..,

By

Anirudh hug atlee

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. அட்லீ இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், நடிகை நயன்தாரா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு, சுனில் குரோவர், சிமர்ஜீத் சிங் நாக்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில், இந்த படத்தை பார்ப்பதற்கு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் இயக்குனர் அட்லீ, அவரது மனைவி மற்றும்  இசையமைப்பாளர் அனிருத் ஒன்றாக சென்று கண்டு மகிழ்ந்தனர்.

அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஆக்ஷன், மாஸ், மிரட்டல் என அனைத்தையும் ஷாருக்கானுக்காகவும் ரசிகர்களுக்காகவும் அட்லீ பார்த்து பார்த்து செய்துள்ளார். இந்த படத்தில் அட்லீயின் வழக்கமான ஸ்டைலில் அனைத்து எமோஷன்களையும் கலந்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது.

மேலும், அனிருத்தின் இசையும் பெருமளவில் பாராட்டை பெற்றுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் என்றே சொல்லலாம். சொல்ல போனால், பாலிவுட்டையை மிரள வைத்துளர்கள் என்றே கூறலாம்.

Anirudh - atlee
Anirudh – atlee [Image -@anirudhofficial]

தற்பொழுது, படத்தை பார்த்துவிட்டு அனிருத்-அட்லீ ஆகிய இருவரும் பூரிப்படைந்து கட்டிபுடிக்கும் புகைப்படம் ஒன்றை அனிருத் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ஆழ்வார்பேட்டையில் இருந்து அந்தேரி வரை என்று குறிப்பிட்டு இந்த படம் மற்றும் இசை மீதான உங்கள் அன்புக்கு நன்றி, கிங் ஷாருக்கானுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.