1971 ஆம் ஆண்டு போர் வெற்றியை கொண்டாட இரண்டு புதிய பைக்குகளை அறிமுகப்படுத்திய ஜாவா

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் 50 ஆண்டுகால வெற்றியை கொண்டாடும் நோக்கில் இராணுவத்தின் நினைவாக ஜாவா மோட்டார் சைக்கிள்கள் கிளாசிக் ஜாவா பைக்குகளை இரண்டு புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தின. இந்த இரண்டு பைக்குகளின் விலை 1.93 லட்சம் அனைத்து டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

ஜாவா பைக் காக்கி மற்றும் மிட்நைட் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுளள்து. இந்த இரண்டு வண்ணங்களும் இந்திய இராணுவத்தின் வீரம் மற்றும் துணிச்சலைக் காட்டுகின்றன. இதனுடன், பைக்கின் பெட்ரோல் கீழ்  1971 ஆம் ஆண்டின் வெற்றியைக் குறிக்கும் ‘லாரல் வெராத்து’ நினைவுச் சின்னத்துடன் கொண்டுள்ளது.

இரு நிற ஆப்ஷன்களும் மேட் பினிஷ் மற்றும் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிளாக்டு-அவுட் ஸ்போக் வழங்கப்பட்டு உள்ளது.  ஜாவா மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் இல்லை. 293சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 27.02 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் வழங்குகிறது. இத்துடன் இந்த எஞ்சின் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan