ரோஹித் சர்மா விலகல் கேப்டன் பொறுப்பை ஏற்கும் ஜஸ்பிரித் பும்ரா

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் ரோஹித் சர்மா விலகல்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் மைதானத்தில் நடைபெறுகிறது.

இரண்டாவது முறையாக  கொரோனா தொற்று உறுதியானதால் ரோஹித் ஷர்மா இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளார், மேலும் ரோஹித் இல்லாத நிலையில் அணித்தலைவராக பும்ரா வழிநடத்துவார் என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.

மூன்றரை தசாப்தங்களில் முதல்முறையாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வழிநடத்த உள்ளார். பும்ரா கபில் தேவிற்கு பிறகு இந்த அற்புதமான வாய்ப்பை பெற்றுள்ளார், 1987 க்குப் பிறகு முதல் முறையாக, இந்தியா ஒரு வேகப்பந்து வீச்சாளரை கேப்டனாக பெறுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தென்னாப்பிரிக்காவில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டார்.

லீசெஸ்டர்ஷைருக்கு எதிரான இந்தியாவின் சுற்றுப்பயண ஆட்டத்தின் போது ரோஹித்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.அவர் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 25 ரன்கள் எடுத்திருந்தார், ஆனால் நேர்மறை சோதனைக்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்ய வரவில்லை.

இதற்கிடையில்,இந்திய அணி புதன்கிழமை பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டது அப்பொழுது  ரோஹித் பயிற்சிக்கு வெளியே வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஜூலை 1-ம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் வெளியேறியுள்ளர், ஆர்டி-பிசிஆர் சோதனை மீண்டும் நேர்மறையாக வந்துள்ளதால்,  அவர் இன்னும் தனிமையில் இருக்கிறார். கேஎல் ராகுல் இல்லாததால் துணை கேப்டன்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்க உள்ளார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment