ரஷ்யா – உக்ரைனுக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்துவரும் வேளையில் உக்ரைனுக்கு 100 ராணுவ வாகனங்களை வழங்கியுள்ளது ஜப்பான்.
சமீபத்தில், நடைபெற்ற ஜி7 மாநாட்டில் உக்ரைனுக்கு உதவுவதாக ஜப்பான் உறுதியளித்திருந்தது. அதன்படி, மூன்று வகையான வாகனங்களை பட்டியலிடும் ஆவணத்தை உக்ரேனிய தூதர் செர்ஜி கோர்சுன்ஸ்கியிடம் வழங்கினார்.
அதன்படி, சுமார் 100 இராணுவ வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ஜப்பான் உக்ரைனுக்கு குண்டு துளைக்காத உள்ளாடைகள், ஹெல்மெட்கள், எரிவாயு முகமூடிகள், ஹஸ்மத் சூட்கள், சிறிய ட்ரோன்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது. ஏற்கனவே, உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.