கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு – முதல்வர் ஆலோசனை!

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை.

ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையாளர் இன்றி நடத்தலாமா என முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்று பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்பை ரத்து செய்து ஆன்லைன் வகுப்பை தொடர்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் வரும் 10-ஆம் தேதியுடன் முடியும் நிலையில் அதனை கடுமையாக்கவும்ம், கூடுதலாக என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்