ஜல்லிக்கட்டு நாயகன் மோடியா? உலகமகா நடிப்புடா சாமி – முக ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் 200 இல்ல, 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

தேனியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முக ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இத்தனை நாட்களாக ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று தனக்குத்தானே விளம்பரம் தந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று பிரதமர் மோடி முன்பு பேசும்போது, உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான் என்கிறார், என்று கூறிய ஸ்டாலின், உலகமகா நடிப்புடா சாமி என்று சினிமாவில் வரும் டயலாக்கை சுட்டிக்காட்டினார்.

ஜல்லிக்கட்டுக்கு காரணமாக இளைஞர்கள், எந்த அரசியவாதியும் கிடையாது. இளைஞர்கள் நடத்திய போராட்டத்தினால் தான் ஜல்லிக்கட்டு வந்தது. ஆகவே, அப்படிப்பட்ட இளைஞர்களை, கொச்சைப்படுத்தாதீங்க ஓபிஎஸ் அவர்களே என்று கேட்டுக்கொண்டார். அமைதியான போராட்டத்தை எப்படியாவது கலைக்க வேண்டும் என்றும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்து தடியடி நடத்தி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததை ஒருபோதும் மக்கள் மறக்கமாட்டாரகள்.

ஆகையால், கருத்துக்கணிப்பை கண்டு பெருமிதம் கொள்ளமாட்டேன். தொடர்ந்து பணியை சிறப்பாக செயலாற்றுவேன். ஒரு தொகுதியில் கூட அதிமுக பெற கூடாது. தமிழகத்தில் 200 இல்ல, 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும். ஒரு அதிமுக வெற்றி பெற்றாலும், அதிமுக எம்எல்ஏவாக இருக்கமாட்டார்கள், பாஜக எம்பியாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார். மோடி எதனை முறை வந்தாலும், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்கு நடக்காது என குறிப்பிட்டுள்ளார்.