ஜல்லிக்கட்டு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை!

ஜல்லிக்கட்டு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை!

அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை.

சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

இதனிடையே, ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 15 அமைப்புகளின் மனு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு நவம்பர் 23 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *