தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு!பொங்கல் பரிசாக தயாராகும் காளைகள் ….ஒரு தொகுப்பு…

நமக்கு ஜல்லிகட்டை பற்றிய அறிமுகம் தேவை இல்லை .ஏனென்றால் தமிழனின் வீர விளையாட்டுகலில் ஒன்றான ஜல்லிகட்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது.தமிழனின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டு ஆகும் .
ஆனால்  ஜல்லிகட்டு தான்  கடந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பேசப்பட்ட வார்த்தை…தை புரட்சியின் மூலம் மீட்கப்பட்ட தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு,  மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு புகழ்பெற்றவை. இங்கு தான் வாடிவாசல் அமைத்து ஜல்லிகட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.
பொங்கல் திருநாள் நெருங்கி வருவதை அடுத்து, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காலை எழுந்தவுடன் பருத்திகொட்டை புண்ணாக்கு, கடலை மிட்டாய், வாழைப்பழம் மற்றும் தீவனங்கள் வழங்கி, வாரந்தோறும் நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஆதரவு தெரிவித்த வெளிநாட்டு தமிழர்கள், இந்த ஆண்டு களத்திலேயே குதிக்கத் தொடங்கிவிட்டனர். வெளிநாட்டில் வேலைபார்க்கும் கல்லம்பட்டியை சேர்ந்த இளைஞரான அருள் சொந்த ஊர் திரும்பி, தமது காளைகளுக்கு மும்முரமாக பயிற்சி அளித்து வருகின்றார். தமது காளைகள் அலங்காநல்லூர், கண்டுபட்டி, சிராவயல், பாலமேடு போன்ற ஊர்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளதாக பெருமிதம் கொள்கின்றார்.
ஜல்லிக்கட்டு காளைகளை ‘கருப்பு, முத்து’ போன்ற பெயர்களை சொல்லியே அழைக்கின்றனர் அதை வளர்ப்பவர்கள். கடந்தாண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்ற மேலூர் அருகேயுள்ள அரிட்டாபட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் புல்லட் மோட்டார் சைக்கிளையும், அழகாபுரியை சேர்ந்த மூர்த்தி என்பவர் இருசக்கர வாகனத்தையும் பரிசாக வாங்கி மேலூர் பகுதிக்கு பெருமை சேர்த்தனர். இந்தாண்டு சிறப்பான முறையில் மதுரை மாவட்டத்தில் வாடிவாசல்கள் தயாராகி வருகின்றன.
ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்வதற்காக பயிற்சி பெற்ற காளைகளும் காத்து கொண்டிருக்கின்றன. களத்தில் காளைகளை அடக்கி வெற்றி வாகை சூட மாடுபிடி வீரர்களும் ஆவலுடன் தயாராக இருக்கின்றனர்.. இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு உற்சாகம் கரைபுரண்டோடும் என்பதில் ஐயமில்லை.இந்த வருடம்   முதல்  ஜல்லிகட்டாக புதுக்கோட்டையில் நடைபெற்றது இதன் வரவேற்பே நம்மை உற்சாகப்படுத்தியுள்ளது ….இனி வரும் ஜல்லிகட்டுகளை பொறுத்திருந்து நாம்  அனைவரும் பார்ப்போம்…
source: dinasuvadu.com

Leave a Comment