பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும்-ஜெய்சங்கர்

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக

By venu | Published: Sep 01, 2019 10:10 AM

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.இதன் பின்னர் காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் கமிஷனர் கிறிஸ்டோஸ் ஸ்டைலி நிட்ஷை மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.இந்த சந்திப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்  அமைச்சர் ஜெய்சங்கர்.அவரது பதிவில்,  இந்த சந்திப்பு சிறப்பானதாக அமைந்ததது.சந்திப்பின்போது ஆப்கன் மற்றும் ஈரான் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் சிறப்பான நிர்வாகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான இந்தியாவின் எதிர்பார்ப்பு குறித்து பேசியதாக கூறினார்.மேலும் பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc