,
Jailer wrap

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

By

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில்  ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், உள்ளிட்ட பல திரைபிரபரலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர்  அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், ஒருவழியாக  படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முடிந்ததையோட்டி, படக்குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம்  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  மேலும் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.