34.4 C
Chennai
Friday, June 2, 2023

ஜெய்தேவ் உனத்கட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்!

தோள்பட்டை காயம் காரணமாக ஜெய்தேவ் உனத்கட் ஐபிஎல் 2023 தொடரில் இருந்து விலகினார்.

தோள்பட்டை காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் வீரர் 31 வயதான ஜெய்தேவ் உனத்கட் விலகியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் பயிற்சியின்போது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காரணத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்குச் செல்வதற்காக உனத்கட் பெங்களூரில் உள்ள என்சிஏவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டனில் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் ஜெய்தேவ் உனத்கட் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.