Ahmedabad - Rath Yatra

ஜெகநாதர் ரத யாத்திரை: கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்து 11 பேர் காயம்.!

By

குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று வருடாந்திர பகவான் ‘ஜகந்நாதர் ரத யாத்திரை’ செல்லும் வழியில் ஒரு வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததி ஒருவர் உயிரிழப்பு மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.

தரியாபூர் பகுதியில் வந்துகொண்டிருந்த ஜகந்நாதர் ரத யாத்திரையை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, மூன்று மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடி பால்கனி இடிந்து விழுந்தது.

இதில், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு சிகிச்சையின் போது மெஹுல் பஞ்சால் என்பவர் உயிரிழந்தார்.  அந்த கட்டிடம் பழமையானதாகவும், பாழடைந்ததாகவும் இருந்ததால், அதிக நபர் நின்றுகொண்டிருந்தாள் தாங்கமுடியமல் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.