ரிஷப் பண்டை தொடர்ந்து வெளியேறிய ஜடேஜா..! இதுதான் காரணம்..!

இந்திய, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்டை தொடர்ந்து, ஜடேஜாவும் காயத்தால் வெளியேறினார்.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் சிட்னி மைதானத்தில் தொடங்கியது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து , இறங்கிய இந்திய அணி 100.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்தனர்.

இந்நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் பேட்டிங்கின் போது ரவீந்திர ஜடேஜாவின் இடது கட்டைவிரலில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா ஸ்கேன் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என பிசிசி ஐ தெரிவித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா 28* ரன்கள் எடுத்து கடைசிவரை நின்றார்.

இதற்கு முன் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பேட்டிங்கின் போது பந்து தாக்கியதில் இடதுகையில் காயம் ஏற்பட்டது. ரிஷப் பண்ட் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்கேன் செய்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ரிஷப் பண்ட் முதல் இன்னிங்ஸில் 36 ரன் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்துவீச்சில் வார்னரிடம் ஆட்டம் இழந்தார்.

author avatar
murugan