ஜாக்பாட் படத்தில் ஜோதிகாவுக்கு வில்லியா ரேவதி?! வெளியான ருசிகர தகவல்!

நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக கடந்து வருகிறார். அந்த வகையில் ஜோதிகாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஜாக்பாட். இந்த படத்தை குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார்.  ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு, மன்சூர் அலிகான் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இப்படமானது டார்க் பேண்டசி காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை ஜோதிகாவும் ரேவதியும் ஒன்றாக படத்தில் பயணித்தாலும், ஒரு கட்டத்தில் இருவரும் எதிரும் புதிருமாக மாறும் காட்சிகளும் உள்ளதாம், ஆதலால், நீ படத்தில் ரேவதி வில்லியாக கூட இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் ரிலீஸ் ஆனால் தான் இது பற்றிய முழுவிவரம் தெரியவரும்.
author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.