ஜெ.மரணம்:ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று ஆஜர் இல்லை

ஜெ.மரணம்:ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று ஆஜர் இல்லை

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று  ஆஜர் இல்லை.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.

Image result for விசாரணை ஆணையம்

 

அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

 

பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி  23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும் , மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை  ஜனவரி  22 ஆம் தேதியும்  ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது.

Related image

ஆனால்  சம்மனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஆனால் ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல்  2 முறை அவரது தேதி மாற்றப்பட்டது.

இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, இன்று  (பிப்ரவரி  19-ஆம் தேதி) காலை 11 மணிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது.

ஆனால்  ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று  ஆஜர் இல்லை.முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் வேறு ஒரு நாளில் ஆஜராக தேதி மாற்றி கொடுக்க ஆணையத்தில் துணை முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *