வடிவேலு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். இன்று மீம் கிரியேட்டர்கள் என்று ஒருவர் உருவாக மிக முக்கிய காரணம் வடிவேலு தான்.

அந்த வகையில் வடிவேலுவிற்குமிகப்பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த சோதனை அவரே அவர் தலையில் மண்ணை போட்ட கதை தான்.

ஆம், 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிக்க கால்ஷீட் கொடுத்து படப்பிடிப்பிற்க்கே ஒழுங்காக வரவில்லை.

இது குறித்து சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கு, வடிவேலு அவர் பங்கிற்கு அவர்கள் தான் படப்பிடிப்பை தொடங்கவில்லை என கூறினார்.

ஆனால், செட் எல்லாம் அமைத்துத் படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் வடிவேலு பல கண்டிஷன் போட, அதனால் தான் படப்பிடிப்பு நின்றுள்ளதாம்.

அதனால், தற்போது வரை ஆன செலவை வடிவேலு தரவேண்டும், அதுவரை யாரும் வடிவேலுவை படத்தில் நடிக்க கமிட் செய்ய கூடாது என ரெட் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.