பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியா கடைசியாக மம்முட்டிக்கு ஜோடியாக கடைசியாக நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் இப்போது யாரையும் காதலிக்கவில்லை. கண்டிப்பாக நான் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் அதற்கு இன்னும் சில காலங்கள் இருக்கிறது.

கண்டிப்பாக நான் காதலித்து தான் திருமணம் செய்துகொள்வேன். பொதுவாகவே எனக்கு ஒருவரை எனக்கு பிடிக்க வேண்டும் என்றால் அவரது குணம் வைத்து தான் பிடிக்கும். அப்படி யாரையும் எனக்கு இதுவரை பிடிக்கவில்லை. எனக்கு என்று யாரும் இல்லை. நான் சிங்கிளாக தான் இருக்கேன்.

எனக்கு ஒருவரை பிடிக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக அவருடைய கண் அழகாக இருக்கவேண்டும். அது எனக்கு பிடிக்கவேண்டும்” என திருமணம் குறித்து பேசியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் உங்களுக்கு ஒரு நல்ல பையன் கிடைக்கவேண்டும் என கூறி வருகிறார்கள்.