முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு..!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. 

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக வேலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் நடந்த சோதனையில் பணம், நகை, சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.