கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த இத்தாலி..!

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு இத்தாலி ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா தொற்றுப்பரவல் வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி உலக நாடுகளிடையே தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இன்று ரோமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளதாவது, கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை இத்தாலி அங்கீகரித்துள்ளதாகவும், தடுப்பூசி செலுத்திய மக்கள் கிரீன் பாஸுக்கு தகுதியுடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. இத்தாலி உட்பட தற்போது மொத்தம் 19 ஐரோப்பிய யூனியன் நாடுகள் கோவிஷீல்டிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன், இத்தாலியில் ஃபைசர், மாடர்னா, வக்ஸர்வ்ரியா, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.