இத்தாலி : அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் கோவாக்சின் இணைப்பு!

இத்தாலியில் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் வரலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒவ்வொரு நாடுகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின்  தடுப்பூசி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்காமல் இருந்தது.

எனவே பல நாடுகளும் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட இந்திய பயணிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கோவாக்சின் செலுத்திய பயணிகளை தங்கள் நாட்டுக்குள் உள்ளே வரலாம் என தெரிவித்துள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அரசும் நவம்பர் 22 ஆம் தேதி முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்திய பயணிகளை தங்கள் நாட்டிற்குள் தனிமைப்படுத்தல் இன்றி அனுமதிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

author avatar
Rebekal