இனிவரும் காலங்களில் பலருக்கு வயிற்று வலியை உண்டாக்கும் – அமைச்சர்

முதல்வர் பொங்கல் பரிசாக ரூ.2,500 அறிவித்தது பலருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலை வருவதை அடுத்து, சமீபத்தில் சேலம் எடப்பாடியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் பழனிசாமி, பொங்கல் தொகுப்புடன் சேர்த்து பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு முக ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் விமர்சனம் செய்து வந்தனர். அதாவது, தேர்தல் வருவதால் முதல்வர் அறிவித்துள்ளார் என்றும் மக்கள் வரிப்பணத்தை பரிசாக வழங்க உள்ளார் எனவும் குற்றசாட்டியுள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசாக ரூ.2,500 அறிவித்தது பலருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் பலருக்கு வயிற்று வலியை உண்டாக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற டிசம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 30 வரை டோக்கன் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்