வரும் 23ம் தேதி முதல் இவர்களுக்கும் இது கட்டாயம் – போக்குவரத்து காவல்துறை

இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு.

சென்னையில் வரும் 23 தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் ஒட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த 15-ம் தேதி வரையில் இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டது. இதில்ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 98 பேர் உயிரிழந்திருப்பதும். 841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது என தகவல் வெளியாகியிருந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 714 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். எனவே, இருசக்கர வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த, குறைக்க நாளை மறுநாள் முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும் வாகன ஓட்டிகள் விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய அதிரடி சோதனை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

கருப்பு உலர் திராட்சையின் ஆச்சர்யமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!

கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான  நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…

13 mins ago

இலவசமா கிடைச்ச தனுஷ் பட டிக்கெட்! பிளாக்கில் வித்து போலீஸ் கிட்ட மாட்டிய சென்ராயன்!

Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி…

33 mins ago

முதன் முறையாக தேர்தலில் வாக்களித்த ஷாம்பன் பழங்குடியினர்கள்.! யார் இவர்கள்…

The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…

39 mins ago

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தரமாக இருக்கும்…பிரேமலு 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!’

Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு…

40 mins ago

உங்க மிக்ஸியில் மறந்தும் இந்த பொருட்களை அரைச்சிடாதீங்க..!

Mixer grinder-மிக்ஸியில் எந்த பொருட்களை எல்லாம் அரைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மிக்ஸர் கிரைண்டர்: நவீன இயந்திரங்கள் நம் சமையலறையில் தற்போது முக்கிய…

44 mins ago

நான் வெளிப்படையாகவே சொல்றேன்.. எனக்கு அதுதான் முக்கியம்… கவுதம் கம்பீர்

ஐபிஎல் 2024: எனக்கு செயல்முறையை விட முடிவு தான் முக்கியம் என்று கொல்கத்தா அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் ஓப்பனாக பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்…

47 mins ago