வலிப்பு ஏற்பட்ட பக்தருக்கு முதலுதவி செய்த பெண் காவலரை பாராட்டிய பொதுமக்கள் !

வலிப்பு ஏற்பட்ட பக்தருக்கு முதலுதவி செய்த பெண் காவலரை பாராட்டிய பொதுமக்கள் !

அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ,48 நாள்கள் பக்தர்களுக்கு காட்சி தருவார்.இதனை தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கி படையெடுத்து வந்து அத்திவரதர் தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த 12 நாள்களில் 15 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து உள்ளனர். இந்நிலையில் நேற்று குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு பக்தர்கள் சில  மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டனர்.இருப்பினும் 1லட்சத்து 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று கோவில் வளாகத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.அப்போது அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் தீபா வலிப்பு வந்த பக்தருக்கு விசிறிவிட்டு ,முகத்தில் தண்ணீர் அடித்து துடைத்து விட்ட பக்தருக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தார்.

இதைத்தொடர்ந்து பின்னர் ஆம்புலன்ஸ் வர வைத்து அந்த பக்தரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பெண் காவலர் தீபா செய்த இந்த நிகழ்வு அங்கு இருந்த மற்ற பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.மேலும் பலர் காவலர் தீபாவிற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

 

author avatar
murugan
Join our channel google news Youtube