இது அரசுக்கு இருக்கும் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது – சீமான்

இது அரசுக்கு இருக்கும் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது – சீமான்

எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தள்ளிவைக்கப்பட்டிருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை 13.01.2022 அன்று நடைபெறுவது பொருத்தமற்றதாகும்.

எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தள்ளிவைக்கப்பட்டிருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை (13.01.2022) நடைபெறவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தள்ளிவைக்கப்பட்டிருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை 13.01.2022 அன்று நடைபெறுவது பொருத்தமற்றதாகும். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக, நேற்று மட்டும் சென்னையில் 6484 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இக்கூட்டத்தை நடத்துவது அரசுக்கு இருக்கும் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.

கொரோனா பெருந்தொற்றுக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டப் பின்னரே கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற வேண்டும். நாளை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கு உடன்பாடில்லை என்றாலும் இக்கோரிக்கையை மீறி நடைபெறுமாயின் பெருந்திரளாக கூட்டத்திற்கு வருவதை தவிர வேறுவழியில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube