வீட்டு வேலையை மனைவி தான் செய்ய வேண்டும் என கணவன் எதிர்பார்ப்பது தவறு – மும்பை உயர்நீதிமன்றம்!

வீட்டு வேலை அனைத்தையும் மனைவி தான் செய்ய வேண்டும் என கணவர்கள் எதிர்பார்ப்பது மிகவும் தவறானது என மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அண்மையில் மனைவி டீ போட்டு கொடுக்காததால் கணவன் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற வழக்குகள் சாதாரணமானவை அல்ல எனவும், சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வுகளால் தான் இதுபோன்ற கொலை சம்பவங்கள் ஏற்படுகிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு மனைவி என்பவள் பொருளோ அல்லது உங்களுக்கு தனிப்பட்ட உடமையோ கிடையாது. அவளும் உங்களை போன்ற ஒரு உயிர்தான் என கூறியுள்ளனர். மேலும், பாலின ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதால் தான் சில ஆண்கள் இவ்வாறு செய்வதாகவும், மனைவி தான் வீட்டு வேலை அனைத்தையும் செய்ய வேண்டும் என கணவர்கள் எதிர்பார்ப்பது தவறு எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் அவ்வாறு மனைவியிடம் மொத்தமாக வீட்டு வேலைகளை நீ தான் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது எனவும் கூறிய நீதிபதிகள், இந்த கொலை செய்த நபரின் ஜாமின் மனுவை நிராகரித்து கொலையாளி என குற்றம் நிரூபித்துள்ளனர்.

author avatar
Rebekal