திமுக தேர்தல் அறிக்கை பொய்யானது என நாங்கள் கூறியது உண்மைதான்- முதல்வர் பழனிசாமி

15

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ளது.திமுக தேர்தல் அறிக்கை பொய்யானது என நாங்கள் கூறியது உண்மைதான் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ளது.அதேபோல்  தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் அரக்கோணத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,  திமுக தேர்தல் அறிக்கை பொய்யானது என நாங்கள் கூறியது உண்மைதான் .மக்களுக்கு நன்மை செய்யக்கூடியதையே அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளோம், ஜெ. மரணத்தைப் பற்றி திமுக விசாரிக்குமாம். அவரது மரணத்திற்கு காரணமே திமுக தான்.

கோடநாடு விவகாரத்தில் என் மீது பழிசுமத்த திட்டம் தீட்டியுள்ளனர். என் மீது பழிசுமத்த ஹோட்டலில் வைத்து திட்டம் தீட்டியதாக வெளியான வீடியோவை பார்த்தேன். சாதிக்பாட்ஷா மரணம்,அவரது மனைவி கார் மீதான தாக்குதலை அரசு கூர்ந்து கவனிக்கிறது என்று பேசியுள்ளார்.