இந்த பழக்கம் தான் எனது வாழ்க்கை மோசமாகியதற்கு காரணம்! பிரபல நடிகை ஓபன் டாக்!

நடிகை மனிஷா கொய்ராலா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பம்பாய், முதல்வன்,

By leena | Published: Oct 23, 2019 07:20 AM

நடிகை மனிஷா கொய்ராலா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து இவர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு இந்த நோயிலிருந்து மீண்டெழுந்துள்ளார். இதனையடுத்து நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், எனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்த ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மேலும், என்னை பார்த்து யாரேனும் புற்றுநோயில் சிக்கி குணமடைந்தவர் என்று சொன்னால் அதற்காக வருத்தப்பட மாட்டேன். புற்றுநோய் பாதிப்பில் நான் சிக்கியதை மறந்து எனது நடிப்பு மற்றும் திறமை பற்றி பேசுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு ஆரம்பத்தில் மதுப்பழக்கம் இருந்தது. இதனால் தான் எனது வாழ்க்கை மோசமானது என்று கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc