அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது.! – பிரதமர் மோடி

அனைத்து சவிதமாக மக்களுக்கும் அவர்கள் கனவை நிறைவேற்றும் வண்ணம் அமைந்துள்ளது. -பிரதமர் நரேந்திர மோடி.

இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023- 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் மூலம், வருமான வரி விலக்கு , வருமான வரி உச்சவரம்பு உயர்வு, சிறுகுறு தொழில்களுக்கு கடனுதவி, நூலகம் அமைப்பது , புதிய நர்சிங் கல்லூரிகள் திறப்பது, சுங்க வரி உயர்வு, சுற்றுலா தலங்கள், பான் கார்டு இனி அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், இந்த பட்ஜெட் ஆனது இந்தியாவை வலுவாக கட்டமைக்க ஒரு நல்ல அடித்தளமாக இருக்கும். இந்த பட்ஜெட் ஏழைகள் நடுத்தர மக்கள் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விதமாக மக்களுக்கும் அவர்கள் கனவை நிறைவேற்றும் வண்ணம் அமைந்துள்ளது என தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சி பாதையில் புதிய ஆற்றலை உட்புகுத்துகிறது என்றும், நமது நாட்டிற்காக பாரம்பரியமாக உழைக்கும் கைவினைகலைஞர்கள் சமூகத்தினர்களுக்காக அவர்களுக்கான பயிற்சி மற்றும் அதற்கான ஆதரவு தொடர்பான திட்டம் இந்த பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும்,

கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் பெண்களின் வாழ்க்கையை எளிதாகுவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் அவர்களை மேலும் மேம்படுத்தும் திட்டமும், குடும்பங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வண்ணம் சிறப்பு சேமிப்பு திட்டமும் விரைவில் தொடங்கப்படும். எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment