மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், கடந்த சில நாட்களுக்கு முன்பாக, அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில், ” சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.” என கூறியுள்ளார்.

இவரது இந்த கருத்து பலரின் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், செண்பக மன்னார் ஜீயர், திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கமலஹாசன் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடம் லஞ்சம் வாங்கி கொண்டு இந்துக்களை இழிவுபடுத்துவதாக கூறியுள்ளார்.

மேலும், கமலஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாகவும், காந்தியை கோட்சே சுட்டத்தில் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார்.